பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த வாரம் தீர்மானம் !
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்தவாரம் தீர்மானிக்கவுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக்குழு கூடிஇ அந்த தீர்மானத்தை எடுக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அதேநேரம், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்