பேஸ்புக் விருந்தொன்றில் கலந்துகொண்ட அறுவர் கைது
மஹாவெல – நாரங்கமுவ வீதியின் மடவல பகுதியில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பொலிஸ் சிறப்புப் படையில் பணியாற்றுகின்ற உப பொலிஸ் பரிசோதகரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் உரிமம் இல்லாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மாத்தளை, மஹாவெல, கட்டுகஸ்தொட, கண்டி மற்றும் இரத்தோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் இன்று நாவுல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.