பேர வாவிக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்

கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேர வாவிக்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலம் நேற்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

கொம்பனித்தெரு பொலிஸாருக்கு சடலம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 05 அடி 06 அங்குல உயரம் மற்றும் நீல நிறச் சாரம் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலத்தில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்