பேருந்து விபத்து: ஒருவர் காயம்
கேகாலை மாவட்டம் அரநாயக்க – கந்துன வீதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது.
குறித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்துள்ளார்.
விபத்து ஏற்படும் போது பேருந்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்