பேருந்து விபத்தில் 3 பேர் காயம்

திருகோணமலை – கன்னியா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பகுதியில் இருந்து வருகைத்தந்த சுற்றுலாப்பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.