
பேருந்து மோதி மாணவன் படுகாயம்
வவுனியாவில் இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை மோதியதிலேயே மாணவன் படுகாயமடைந்தார்.
காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
