
பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம்
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயணக் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து பயணக் கட்டணத்தை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இந்த வருடத்துக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதத்தில் மாத்திரமே திருத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
