பேருந்து உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர் கைது!
ஹங்வெல்ல – நெலுவன்துடுவ பகுதியில் பேருந்து உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட நபர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 55 வயதுடைய பேருந்து உரிமையாளர் ஒருவர் பலியானார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் இன்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.