பேய் பிடித்த மகனை மந்திரவாதியிடம் அழைத்து சென்ற பெற்றோர் : நடந்த விபரீதம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் சிறுவன் மந்திரவாதியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளான்.
மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்யன் லாண்டே (வயது – 14) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலம் பாதித்துள்ளது. இதனால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மந்திரவாதி ஒருவர் குறித்து சிறுவனின் பெற்றோர் அறிந்துள்ளனர். அவரிடம் அழைத்துச் சென்றால் தங்கள் மகனுக்கு குணமாகிவிடும் என கருதிய அவர்கள், கர்நாடக மாநிலம் ஷிர்கூருக்கு ஆர்யனை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மந்திரவாதி அப்பாசாகேப் காம்ளே சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பேயை விரட்ட வேண்டும் என ஆர்யனை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் அங்கிருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மூடநம்பிக்கை நல ஆர்வலர்கள், மந்திரவாதி மீது பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மந்திரவாதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்