பேன் மருந்து கலந்த எண்ணையில் சமைத்த உணவை உண்டு 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 11 சிறுவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

தலைக்கு வைக்கும் பேன் மருந்தை தேங்காய் எண்ணெயுடன் கலந்து சமையலறையில் வைத்திருந்த நிலையில், தேங்காய் எண்ணெய் என நினைத்து தாயார் அந்த எண்ணையில் நூடில்ஸ் தயாரித்து காலை உணவாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறார்கள் மயக்கமற்ற நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.