பெற்றோரின் கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்

அம்பாறை – பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குழந்தையொன்று விபத்தக்குள்ளாகி உயிர் இழந்துள்ளது.

விபத்தில் நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 2 வயதும் 7 மாதமான குழந்தையே உயிரிழந்தது.

வீதிக்கு அருகாமையில் உள்ள விகாரையில் குழந்தையுடன் பெற்றோர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, ​​குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து மீறி வீதிக்கு வந்துள்ளது.

இதன்போது லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் இங்கினியாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இங்கினியாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்