பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச விலை 160 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தீடீரென வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

இதேநேரம் கொழும்பு மெனிங் சந்தையில், நேற்று ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபாய் முதல் 155 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.