
பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் சீண்டல்
பலாலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஒருவர் கடந்த 26 ஆம் திகதி இரவு பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டமையால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தினத்தில் கணினிப் பிரிவில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரியுடன், போதையில் இருந்த குறித்த பதில் பொறுப்பதிகாரி பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று குறித்த பெண் பொலிஸ் அதிகாரியால் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இடமாற்றப்பட்டதுடன் ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
