
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைப்பு
சீரற்ற காலநிலையுடனான மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
சிட்டி ஒஃப் பெட்டிகலோ – யுகே (CITY OF BATTICALOA – UK) ஏற்பாட்டிலும் அனுசரணையிலும், தாயக தன்னார்வலர்களின் உதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட கொம்மாதுறை மேற்கு கிராம சேவையாளர் டனுஷனின் முழுமையான ஒத்துழைப்புடனும் இன்றைய தினம் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களை இனங்கண்டு முதற்கட்டமாக 56 குடும்பங்களுக்கான உலருணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.
குறுகிய காலத்தினுள் ஆரம்பிக்கப்பட்ட சிட்டி ஒஃப் பெட்டிகலோ – யுகே அமைப்பானது தாயகத்தில் வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



