
8 மாதங்களாக பெண்ணின் உள்ளாடை திருடியதால் வந்த வினை: மோதலில் 10 பேர் காயம்
குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தண்டூகா என்ற கிராமத்தில் வசிக்கும் 30 வயது பெண்ணின் உள்ளாடைகள் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து தொலைந்து வந்துள்ளது.
தனது உள்ளாடைகளை வெளியே காயப்போடும் போதெல்லாம் திருடு போவதால் பெண்ணுக்கு அது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் மர்மத்தை கண்டுபிடிக்க திட்டம் தீட்டி துணி காயவைக்கும் பகுதியில் ரகசியமாக தொலைபேசியை வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
அதில் உள்ளாடையை திருடிய நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது வாலிபர் என்று தெரியவந்தது. ஒருநாள் திருட்டின் போது வாலிபரை கையும் களவுமாக பெண் பிடித்து சண்டை இட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பெண்ணை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பெண்ணின் சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் அங்கு வந்துள்ளனர். அவர்கள் வாலிபரை தாக்கிய நிலையில் இது இரு குடும்பத்துக்கும் இடையே சண்டையாக மாறியது.
மேலும் இந்த சண்டை அப்பகுதியில் இரு தரப்புக்கு இடையே மோதலாக வெடித்து கலவரமாகியது. குறித்த சண்டை பொலிஸாரின் கவனத்திற்கு வந்த நிலையில் மோதல் தடுத்து நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை இரு தரப்பிலும் 20 பேரை கைது செய்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
