
இலங்கை பெண்கள் வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை முற்றாக நிறுத்துவதற்கு யோசனை
இலங்கை பெண்களை வீட்டு பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான யோசனைகளையும் திட்டங்களையும் வழங்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்ஸிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் வருடங்களில் பணிப்பெண்ணாக வெளிநாட்டு வேலைக்கு பெண்களை அனுப்பவதை முற்றாக நிறுத்தி அவர்களை திறமையான பிரிவுகளில் வேலைக்கு அனுப்புவதே இலக்காக காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
