பெண்களுக்கான உரிமைகள், பால்நிலை சமத்துவத்தினை மேன்படுத்தல் செயலமர்வு

 

-யாழ் நிருபர்-

யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும் கருப்பொருளில் யாழ். ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் இரண்டுநாள் செயலமர்வு இன்று யாழில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான தெளிவூட்டல்களை, யாழ். பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் துறையின் விரிவுரையாளர் திருமதி கீர்த்திக்கா தர்மராஜ் வழங்கினார்.

பால்நிலை என்றால் என்ன? சர்வதேச ஆண்கள், பெண்கள் தினங்களின் முக்கியத்துவம், வன்முறை அடிப்படைகாரணங்கள், கல்வியறிவு இல்லாத குறைவான கல்வி, கொடுமைகள் நிறைந்த குழந்தைப் பருவம், குடிப்பழக்கம், பாலியல்பழக்கவழக்கப்பாடங்கள், வன்முறையில் குரல் நலிவுத்தன்னை, வன்முறை நடைபெறக்கூடிய இடங்கள், வன்முறையாளர்களின் தரப்படுத்தலில் வகிவாகம், பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாராபட்சங்களுக்கு எதிரான பிரகடனம் என்பவற்று தொடர்பாக தெளிவூட்டல்களுக்கான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சிவாஞ்சினி உள்ளிட்ட அலுவலகர்கள், ஊடகவியாளர்கள் பலரும் பங்குபற்றினர்.