புலியுடன் போட்டோவுக்கு போஸ் குடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பியுள்ளனர்.

பொதுவாக காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவை என்றாலும் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில விஷப்பரிட்சையில் ஈடுபடுவார்கள்.

புலி ஒன்றுடன் இரண்டு நபர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இதற்கு மத்தியில் வெளியே இருந்து நபர் ஒருவர் குச்சியை வைத்து புலியை சீண்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த புலி தனது சுயரூபத்தினை காட்டவே அருகில் இருந்த இரண்டு பேரும் தலைதெறிக்க உயிரை காப்பாற்றிக் கொண்டு நொடிப்பொழுதில் ஓடி வந்துள்ளனர்.

இது தொடர்பிலான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்