புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது
அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மூன்று சந்தேக நபர்களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் கடந்த 26ஆம் திகதி வீடொன்றில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து புறாக்களை திருடிச் சென்று அவற்றை சுட்டு சாப்பிடுவதை குறித்த இளைஞர்கள் டிக் டொக் வீடியோவாக உருவாக்கி, புறாக்களின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பில் அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்