இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார்

இளம் சமூக செயற்பாட்டாளர் புத்தி பிரபோத கருணாரத்ன காலமானார்.

தனது 30 ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் காலமானார்.

உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

புத்தி பிரபோத கருணாரத்ன ‘கோட்டா கோ கம’ போராட்டத்தின் ஒரு முக்கிய செயற்பாட்டாளர் என்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை எடுத்துரைத்து ஏற்பாடு செய்யப்பட்ட பல போராட்டங்களில் அவர் அங்கம் வகித்திருந்தார்.

ஒரு பத்திரிகையில் பத்திரிகையாளராகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்