புத்தாண்டு தினத்தில் முறுகல்: இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு

-யாழ் நிருபர்-

நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

பட்டா ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்