புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது

கொழும்பு மாவட்டத்தில் கடுவெலை, கொரத்தோட்டை பிரதேசத்தில் வயலில் புதையல் தோண்டிய ஆறு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 4 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தின் மூலம் சுமார் எட்டு அடி ஆழத்தில் புதையல் தோண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பூசகர் எனவும் புதையல் தோண்டிய இடத்தில் இவர் பூஜைகளை நடத்தியுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்