புதையல் தோண்டச் சென்ற குற்ற விசாரணை அதிகாரி கைது!

குருநாகல் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று செவ்வாய்கிழமை வெல்லவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற போது வெல்லவ குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

சந்தேகநபர் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்