புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியின் ஹைக்கூ கவியரங்கம்

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்த திட்டமிட்டுள்ள ஹைக்கூ கவியரங்கத்தின் இரண்டாவது அமர்வு 13.07.2025 மாலை 4.30.மணிக்கு கொழும்பு 13, புதுச் செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கவியமர்வுக்கு ஆசிரியரும் கவிஞருமான எஸ்.அழகேஸ்வரன் தலைமை ஏற்கிறார்.
இதில் இணைந்து கொண்டு ஹைக்கூ கவிதை பாட விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ளலாம்.

மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் இளைஞர் அணியின் தலைவர் ஷெரோன் உடன் 075 1670825 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.