
புதிதாக இணைந்த 11 வயது மாணவன் மீது 15 வயது மாணவர்கள் தாக்குதல்
-யாழ் நிருபர்-
நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை தரம் 6க்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் மாற்றப்பட்டுள்ளார்.
மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
