ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஆடை மற்றும் பேஷன் வடிவமைப்பாளரான பாப் மேக்கி (Bob Mackie) தனது 87ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு செப்டம்பர் 14 அன்று அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவிக்கப்பட்டது.
‘Sultan of Sequins’ என அழைக்கப்பட்ட பாப் மேக்கி, செர், டயானா ராஸ், டினா டர்னர், எல்டன் ஜான், கரோல் பர்னெட் மற்றும் பார்பரா ஸ்ட்ரெய்சாண்ட் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்காக கண்கவர் ஆடைகளை வடிவமைத்தார். குறிப்பாக செருடன் அவர் கொண்டிருந்த நீண்டகால கலைப் பங்களிப்பு மிகவும் பிரபலமானதாகும்.
தொலைக்காட்சி, மேடை மற்றும் திரைப்படத்துறையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றிய மேக்கி, 9 எம்மி விருதுகளையும் ஒரு டோனி விருதையும் வென்றதுடன், ஆஸ்கர் விருதுக்கு மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டார். அவரது படைப்புகள் நவீன பொழுதுபோக்கு உலகின் ஆடை அலங்காரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாராட்டப்படுகிறது.
























