பிள்ளைகளுக்கு புதிய மின்னஞ்சலை திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிட வேண்டாம் – குற்றப்பிரிவு
பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை புதிதாக திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிடுவதை தவிர்க்குமாறும் பிள்ளைகளின் சரியான வயதை உள்ளிடுமாறும் பொலிஸ் குற்றப் பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் போதும், மின்னஞ்சல் கணக்குகளை அமைக்கும் போதும் பெற்றோரின் தகவல்களை வழங்கினால், குழந்தைகள் எந்த இணையதளத்தையும் அணுகும் வாய்ப்பு கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.
பிள்ளைகளின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தகாத உள்ளடக்கங்கள் மற்றும் இணையதளங்களைப் பார்க்கும்; திறனையும் அணுகலையும் இணையதள அமைப்பே கட்டுப்படுத்தும் என்றார்கள்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு ஒன்று கூடிய போதே அதிகாரிகள் இந்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் தொலைபேசிகளைக் கண்காணிக்க முடியும் என்பதால், பிள்ளைகள் பயன்படுத்தும் தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (ரிஆர்சி) அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
