நம்பமுடியாத அளவுக்கு வினோதமான ஆய்வு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை (PET) சிறப்பு வெப்ப முறையில் கரைத்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட “ஈஸ்ட்” (Yeast) கிருமிகள் மூலம் சிதைத்து, அதை புரதம், வனிலா சுவை மற்றும் வைட்டமின்-ஏ கூறுகளாக மாற்றி “மைக்ரோ பைட்ஸ்” (µBites) எனப்படும் குக்கீஸ் தயாரித்துள்ளனர்.
நறுமணத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற இந்த குக்கீ, இதுவரை சுவைத்துப் பார்க்கப்படவில்லை; அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.
பாலைவனம், துருவப் பகுதிகள், மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் உணவு தட்டுப்பாட்டைத் தீர்க்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.









