“பிளாட் கிண்ண” பட்டத்தை வென்றது கொழும்பு சாஹிரா கல்லூரி டென்னிஸ் அணி

13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி பாடசாலைகளுக்கிடையிலான இரண்டாம் பிரிவு டென்னிஸ் இறுதி போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியை தோற்கடித்து கொழும்பு சாஹிரா கல்லூரி பிளாட் கோப்பை பட்டத்தை வென்றது.

இலங்கை டென்னிஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற டென்னிஸ் சுற்றுப்போட்டி கொழும்பு 7 டென்னிஸ் சங்க மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு சாஹிரா கல்லூரி 13 வயதுக்குட்பட்ட டென்னிஸ் அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடி தாலிப், அப்ரார், தாபிஷ், யூசுப், அப்துல் ரஹ்மான், பிலால், ஆகிப் ஆகிய மாணவர்கள் இந்த சாம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டனர்.

எஸ்.நளிமா (அணி பொறுப்பு ஆசிரியர்), கணேந்திரன் (தலைமை பயிற்சிவிப்பாளர்), உதவி பயிற்றுவிப்பாளர்களான கவிலாஸ், அபிஷேக் போன்றோரின் முயறசியின் பயனாக இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.