
பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : இறப்பு வீதம் அதிகரிப்பு
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சியும் வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை திணைக்களத்தின் சிரேஸ்டப் பிரதிப் பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
அதன்படி 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாகவும் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் அவதானிக்கப்பட்ட 140,000 என்ற அளவில் இருந்த மரண எண்ணிக்கை, 2020க்கு பின்னர் 180,000 மாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதற்கான காரணங்களை அவர் குறிப்பிடவில்லை. இந்த நிலைமை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியை பாதகமாக பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
