பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாதமையினால் 40 வயதுக்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு அதனை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.
அதன்படி, வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்துடன் 40 வயதுக்கு மேற்பட்ட பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டை பெறாத இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்