
பிறந்து 9 நாட்களே ஆன சிசுவை விற்க முயன்ற தாய்
மினுவாங்கொடை பன்சில்கொட பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன சிசுவை வேறு ஒரு தரப்பினரிடம் சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் நேற்று சனிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது சந்தேக நபர் சிசுவை 360,000 ரூபாவிற்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
