பிரேசிலில் படகு கவிழ்ந்து 6 பேர் மரணம்: பலர் மாயம்

பிரேசில் நாட்டின் பாகியா மாகாண கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த படகானது சால்வடாரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் சென்றபோதே திடீரென கவிழ்ந்துள்ளது.இதனையடுத்து கடலோர பொலிஸார் கடலில் தத்தளித்த 6 பேரை மீட்டனர். இருந்த போதிலும் இதில் 6 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதுடன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சுற்றுலா பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்