பிரான்ஸில் போராட்டம் : 13 ஆயிரம் பேர் இதுவரையில் கைது!
பிரான்ஸில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுடன் தொடர்புடைய 13000 பேர் இதுவரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக, நேற்றிரவு 45,000 பொலிஸாரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸில், சமிக்ஞையை மீறி காரில் வேகமாக பயணித்த 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், அங்கு வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
