
பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கார் விபத்து
பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவின் போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாஸ் டி கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பெர்க் கம்யூன் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பட்டம் விடும் திருவிழாவின் போது சாலையில் வந்த கார் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தவர்களின் கூட்டத்தினுள் நுளைந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இதன் போது 11 பேர் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந் நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், கார் சாரதியான 76 வயது முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
