பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

-யாழ் நிருபர்-

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் எற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேர்தல்கள் திணைக்கள நாயகம் தவிசாளர் க. ஸ்ரீ சமன் ஸ்ரீ ரத்தனநாயக்க கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இக்கட்டிடத்திற்கு 2019 ஜூன் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்காக 08 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

இதில் தேர்தல்கள் திணைக்கள செயலாளர் ஆர்.ப.ஹேரத், தேர்தல்கள் திணைக்கள உறுப்பினர் ஏ.பாயிஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆ.அமல்ராஜ், பிரதேச செயலாளர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்