பிரதேச செயலகங்களில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

பிரதேச செயலகங்களில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

 

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மெளலவிமார்கள், மேலதிக அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ். பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் இஸ்லாமிய மக்களின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று யாழ். பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ். பிரதேச செயலாளர் சதாசிவம் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.

நோன்பின் முக்கியத்துவத்தின் நெறிப்படுத்தும் வகையில் சிறப்புரைகளும் இடம்பெற்றன. அதனை ரம்ழான் பயிற்சி பண்பாட்டு பாசறை மெலளவி A.S.அஜ்மல் நிகழ்த்தினார். ரம்ழான் சுகவாழ்வு என்னும் கருப்பொருளில் சிறப்புரையினை பைசர் மதனி நிகழ்த்தினார்.

இவ் நிகழ்வு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதில் யாழ். பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவையாளர்களில் உள்ள இஸ்லாமியர்கள், பதவிநிலை மெளலவிமார்கள், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த நல்லிணக்க இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் நேற்று சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்திப், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.வி.அனீஸ், ஓய்வுபெற்ற பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு உலமா சபை தலைவர் ஏ.எல்.எம். சலீம் (சர்க்கி), சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் மற்றும் நிர்வாகிகள், மதரஸா மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்