
பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ள மரம் : போக்குவரத்து முற்றாக தடை !
-பதுளை நிருபர்-
பதுளை கொழும்பு வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையே பாரிய மரங்கள் முறிந்து வீதியில் விழ்ந்துள்ளதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து, தற்போது பண்டாரவளை மேல் வீதி ஹப்புத்தளை ஊடாக செல்லுமாறு பொலிஸார் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
