பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்

-மன்னார் நிருபர்-

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்தார்.

வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதனைத்தொடர்ந்து இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் திருக்கேதீஸ்வர ஆலய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதோடு, திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.