பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்-

யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில், யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும் கருப்பொருளில் யாழ். ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் இறுதிநாள் செயலமர்வு இன்று யாழ். பரமேஸ்வரசந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வாண்மை தொடர்பான தெளிவூட்டல்களை யாழ். பல்கலைக்கழகத்தின் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் துறையின் விரிபுரையாளர் திருமதி கீர்த்திக்கா தர்மராஜ் வழங்கினார்.

யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.சிவாஞ்சினி உள்ளிட்ட அலுவலகர்கள்.ஊடகவியாளர்கள் பலரும் பங்குபற்றினர்