
பாலத்தில் கவிழ்ந்த பேருந்து
கேகாலை ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை – லூல்கந்துர பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் மாலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஹகுரன்கெத்தவிலிருந்து தெல்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே பாலத்தில் இருந்து கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண் பணியாளர்களும் காயமடைந்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
