
கொழும்பு கிரிபத்கொடை மாயா மாவத்தையில், நேற்று வியாழக்கிழமை பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை, பொலிஸ் சிறப்புப் படையினர் சுற்றி வளைத்ததுடன், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நுவரெலியா, நாவலப்பிட்டி, கிரிபத்கொடை, போம்புவல, நாரம்மல மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 4,000 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்களால் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
