பாரத் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட போட்டி

மட்டக்களப்பு – நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகமானது தனது 60வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியில் மட்டக்களப்புஇ அம்பாறை இ திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொள்ளலாம். எதிர்வரும் 13.05.2023 சனிக்கிழமை பாரத் விளையாட்டு கழக மைதானத்தில் அணிக்கு நான்கு பேர் கொண்ட இரவு பகல் போட்டியாக இடம்பெறவுள்ளது. இதனை கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அழைக்கினறனர் பாரத் விளையாட்டு கழகத்தினர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்