பாம்பை நூடுல்ஸ் போன்று சாப்பிட்ட மான்!

புற்களை சாப்பிடும் விலங்கான மான் ஒன்று பாம்பை சாப்பிடும் அதிர்ச்சிக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்று தான் மான். மான் பொதுவாக இலை மற்றும் புல்களை சாப்பிட்டு வாழும் நிலையில், இங்கு மான் ஒன்று சாப்பிட்ட உணவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாம்பு ஒன்றினை மிகவும் ஆர்வமாக சாப்பிட்டுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. இதில் மான் சாலையோரம் நின்று கொண்டு எதையோ சாப்பிடுவது போன்று தெரிகின்றது.

இதனை அவதானித்த கார் ஓட்டுனர் காரை மெதுவாக செலுத்தி அதனை காணொளி எடுத்துள்ளார். மிகவும் கவனமாக பார்த்த பின்பு தான் தெரிகின்றது மான் பாம்பு ஒன்றினை சாப்பிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்