பாம்பு தீண்டி பெண் ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

கொழுந்து பறித்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பசறை கோணக்கலை கீழ் பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டுதலுக்கு உள்ளான நிலையில் பெண் ஒருவர் அயலவர்களினால் பசறை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 16 ம் திகதி கோணக்கலை கீழ் பிரிவில் VP 16 எனும் இலக்கமுடைய தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையிலேயே பாம்பு தீண்டுதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த  பெண் 56 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாவார்.

சடலம்  பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.