பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்கிய இம்ரான்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலப்பன்சேனை, சோலைவெட்டுவான் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று திங்கட்கிழமை உலர் உணவு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த உலர் உணவு பொதிகளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், பள்ளிவாயல் தலைவர், கிண்ணியா மீனவ மகா சங்கத்தலைவர் உட்பட பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்