
பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
களுத்துறை பயாகல கடற்கரையிலிருந்து இளைஞரின் சடலம் இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயாகல பெலபொல்வத்த செடியார் பியகம பகுதியை சேர்ந்த இவர் தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு நேற்று ஞாயிற்று கிழமை நண்பகல் வீட்டில் இருந்துவெளியேறிச் சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கடலில் நீராட சென்று உயிரிழந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
