பாட்டியின் மருந்தை உண்ட மாணவி பலி

பாட்டி பருகவேண்டிய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் மாத்திரைகளை பருகிய பேத்தி, மரணமடைந்த சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் வசிக்கும்15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டியின் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயக்கம் உற்ற நிலையில் அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் சிறுமியின் சடலம் நேற்று திங்கட்கிழமை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்