பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை

தற்போது தட்டுப்பாடு நிலவும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அடுத்த மாத இறுதிக்குள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு கல்வி வௌியீட்டு திணைக்களத்திலிருந்தே பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்க நேரடியாக விநியோகிக்கப்படுவதாக கல்வி வௌியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை 16,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 33 மில்லியன் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்