பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை விநியோகித்தவர் கைது

மட்டக்குளிய பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெல்லே சுரங்க எனப்படும் சுரங்க பிரதீப்புக்கு நெருக்கமான ஒருவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 35 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 1000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்